
இப்படிக்குத் தமிழகத் தமிழன்...
வணக்கம்...என்னை எப்படி அறிமுகபடுத்துவது?நான் ஒரு தமிழன் என்றால் அவ்வளவாக உலகத்தார்க்கு தெரிய வாய்ப்பில்லை......நாங்கள்தான் உலகத்திலேயே மொழியை, கலாச்சாரத்தைக் கண்டுபிடித்த ஒரு இனம் என்றாலும் தெரிய வாய்ப்பில்லை...சிந்து,மொகஞ்சாதாரா போன்ற நாகரிகம் எம்முடையதே என்று விளக்கினாலும் தெரிய வாய்ப்பில்லை...கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி என்றாலும் எவரும் அறியப் போவதில்லை...இருப்பினும் என்னை அறிமுகப்படுத்த,எங்களை அடையாளப்படுத்த ஒரே ஒரு வார்ததையை மட்டும் உபயோகித்தால் போதும் இந்த உலகமே எம்மைத் தெரிந்துகொள்ளும்...அஃதாவது யாம் அடிமை என்பதேயாகும்...ஆம் அடிமை என்ற சொல்லின் பொருள் தற்பொழுது தமிழன் என்றே வரையறுக்கப்பட்டுவிட்டது..ஏமாற்றத்தெரியாத காரணத்தால் ஏமாளிகளாக இருப்பவர்கள் நாங்கள்...எங்களால் மட்டுமே முடியும் இத்தாலியில் பிறந்த ஒருத்தியை வைத்து எம் மக்களை கொன்று குவிக்க...எங்களால் மட்டுமே முடியும் எம் குடும்ப நன்மைக்காக எம் இனத்தையே அழிக்க...எங்களால் மட்டுமே முடியும் கொத்து கொத்தாய் எம் மக்கள் மடிந்துகொண்டிருக்கும் சூழலிலும் கொத்து கொத்தாய் மந்திரி பதவிக்காக வாய் இளித்து நிற்கும் ஒருவனைத் தமிழினத் தலைவராக ஏற்றுக் கொள்ள...எங்களால் மட்டுமேமுடியும் கொலை செய்பவனையும்,கொள்ளையடிப்பவனையும் ராசாவாக்கி அழகுபார்க்க....எங்களால் மட்டுமே முடியும் வந்தேறிகளை வாழவைத்து வாய்க்கரிசி கூட கிடைக்காது வீழ்ந்து போக....எங்கேனும் ஒருவன் கை கட்டி,வாய் பொத்தி கூன் வளைந்து நிற்கிறானா? சந்தேகமே வேண்டாம் அவன் தமிழகத் தமிழனாகத்தான் இருக்க வேண்டும்...வேற்று மொழியை,வேற்று இனத்தைப் பெருமைப் படுத்தி அதன் மூலம் தன்னை ஒரு அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ளும் ஒரு இனம் உண்டென்றால் அது தமிழினம் அன்றி வேறெதுவாக இருக்கமுடியும்? ஆறரை கோடி தமிழ் சாதி இருந்தும்,,,,,தமிழினத் தலைவரை,உலகத் தமிழர்களின் அவதாரத்தை குறித்த வதந்திகளை திட்டமிட்டு பரப்பும் பார்ப்பன ஊடகங்களை அனுமதிக்கிறோமே இப்படியோர் மாண்பு தமிழருக்கன்றி வேறு எவருக்காவது இருக்க முடியுமா? மையில் நீங்கள் மாயை தடவி எழுதுங்கள் காலம் காலமாக உங்கள் எழுத்துக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அடிமையாகி எம் அரியாசனதைத் தருவோம்...திரைப்படத்தில் நீங்கள் அரசியல் செய்தாலே போதும் நீங்கள் வேற்று மொழிகாரனாய் இருந்தால் நிச்சையம் உங்களுக்கு பாலாபிசேகமும் உண்டு பதவியும் உண்டு...
ஐயையோ பதவி போய் விடுமோ என பயப்பட வேண்டாம் தமிழக அரசியல்வாதிகளே நீங்கள் இன்னும் எத்தனை யுகம் வேண்டுமானாலும் படுத்துக் கொண்டே கூட அரசியல் செய்யலாம்..ஏனென்றால் நாங்கள் வீரம் செறிந்த ஈழ மண்ணில் பிறந்தவர்களல்ல எதிர்ப்பு சக்தி இல்லா தற்போதைய தமிழகத்திலே பிறந்தவர்கள், ஆதலால் அடுத்த தேர்தலுக்காய் திருவோடு ஏந்தி நிற்கிறோம் வாருங்கள் வந்து நிரப்பிவிட்டுச் செல்லுங்கள் அது உங்கள் மூத்திரமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம்..
இப்படிக்குத் தமிழகத் தமிழன்...
ஐயையோ பதவி போய் விடுமோ என பயப்பட வேண்டாம் தமிழக அரசியல்வாதிகளே நீங்கள் இன்னும் எத்தனை யுகம் வேண்டுமானாலும் படுத்துக் கொண்டே கூட அரசியல் செய்யலாம்..ஏனென்றால் நாங்கள் வீரம் செறிந்த ஈழ மண்ணில் பிறந்தவர்களல்ல எதிர்ப்பு சக்தி இல்லா தற்போதைய தமிழகத்திலே பிறந்தவர்கள், ஆதலால் அடுத்த தேர்தலுக்காய் திருவோடு ஏந்தி நிற்கிறோம் வாருங்கள் வந்து நிரப்பிவிட்டுச் செல்லுங்கள் அது உங்கள் மூத்திரமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம்..
இப்படிக்குத் தமிழகத் தமிழன்...
நன்றி சிவா