இந்த நாள் இனியதாக அமையட்டும்.
இனிய புத்தாண்டு 2011வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு மகிழ்ச்சியுடனும்,
செல்வமுடனும்,வளமாகவும்,அமைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறோம்.
பாப்புலர் குடும்பத்தார்
நெல்லை மாவட்டம்
9994222789
8428597789
9443971898
Friday, December 31, 2010
இனிய புத்தாண்டு 2011வாழ்த்துக்கள்
Friday, December 24, 2010
Tuesday, December 21, 2010
விண்ணிலும் விளம்பரம் செய்வோம்.....
Wednesday, November 10, 2010
Saturday, November 6, 2010
நெல்லை மாவட்டம் அருகில் நடந்த உண்மை சம்பவம்
காணத்தவராதீர்கள்....
http://www.youtube.com/watch?v=o5gaqAB3fYI&hd=1

Tuesday, September 21, 2010
கவிக்குயில் க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
http://www.youtube.com/watch?v=DKA3_x2WNHE&hd=1
Saturday, September 11, 2010
மாணவர்களின் தற்கொலை மற்றும் உயர்கல்விக்கான மாநில அளவிலான 55 நாள் பிரச்சாரப்பயண அறிக்கை..
வெளிச்சம் அறிமுகம்:
வணக்கம், 2004 ம் ஆண்டு முதல் வெளிச்சம் அமைப்பானது சென்னையை மையமாக கொண்டு, ஏழை மாணவர்கள் பணமில்லை என்கிற ஒரே காரணத்திற்காக தங்கள் வாழ்கையையும், படிப்பையும் இழந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, உதவும் உள்ளங்களின் உதவியால் வெளிச்சம் இன்றுவரை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்ட 515 முதல்தலைமுறை ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி செய்ததால்,வெளிச்சத்தின் மாணவர்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. இந்த வருடம் மட்டும் 51 மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துள்ளனர். வெளிச்சத்தின் முதல் மாணவர் செந்தில் என்பவர் இப்போது ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..
பிரச்சாரத்திற்க்கான காரணங்களும் சிறு நம்பிக்கையும்:
முகம் தெரியாத நபர்களின் உதவியில் படித்தோம். பணமில்லாமல் கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாமல் ‘சீட்’ கிடைத்த போதும், பணம் செலுத்த முடியாமல், வீதியில் நாதியற்று நின்ற பொழுது தான் எங்களுக்கு வெளிச்சம் தெரிந்தது, வெளிச்சம் எங்களை கல்லூரிகளில் படிக்க வைத்ததோடு, பெற்றோரையும் சமூகத்தையும் நேசிக்க சொல்லிகொடுத்ததன் விளைவாக, எங்களை போன்ற மாணவர்கள் படிப்பதற்கு சிரமபடக்கூடாது என கல்விக்கான பணியை செய்து கொண்டிருந்தபோது, உலகம் முழுவதிலும் வருடந்தோறும் 10 லட்சம் பேர்தற்கொலை செய்துகொள்கின்றனர். 1 லட்சம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு 15 நிமித்திற்க்கு ஒரு முறை 15-29 வயதிற்குட்பட்ட ஒருவர் இறக்கிறார் என்பதும், இந்தியாவில் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5வதுஇடத்தில் உள்ளதாகவும் ஆண்டுதோறும் தமிழகத்தில் 11,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் . இவர்களில் 5,000 பேர் மாணவர்கள். சென்னையில் மட்டும் 1,100 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது அச்சுறுத்தும் உண்மையை படித்து போது பதறிப்போனோம்.
அது மட்டுமில்லாது பள்ளிக்கு போகும் குழந்தைகளின் எண்ணிக்கையே படிப்படியாக குறைவதால் பிளஸ் 2விற்குப் பிறகு, 18 வயதில் இருந்து 24 வயது வரை உடையவர்களில் உயர்கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கை, தேசிய அளவில் 11 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 1 வகுப்பில் 100 பேர் சேர்ந்தால் கடைசியில் இடையில் நின்றவர்கள், கடைசியாக 7 பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்வதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சம் சொல்கிறது. மேலும்” மும்பை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ரங்கன் பானர்ஜி, வினாயக் புருஷோத்தம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் பத்து லட்சம் பேரில், 214 பேர் இன்ஜினியரிங் படித்தவர்களாக உள்ளனர்.இந்த எண்ணிக்கை தென் கொரியாவில் தான் அதிகம். அங்கு பத்து லட்சம் பேரில், 1,435 பேர் இன்ஜினியரிங் படித்தவர்கள். ஆனாலும், இது தொடர்பான இன்னும் உறுதியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை.
அப்படியானால் தமிழகத்தின் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்களின் வாழ்வின் அவலங்களையும் , வேதனைகளையும் நம்மால் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை, சுதந்திரம் அடந்த இவ்வளவு காலங்களில் கல்லூரி பக்கம் தலைவைத்து பார்க்காத மக்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை தடுத்தாக வேண்டும் என்று உணர்ந்தோம். குறிப்பாக மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மாணவர்களே முன்வரவேண்டும் என எண்ணினோம், மானவர்களான நாங்கள் எங்களை போன்று எந்த மாணவர்களும் எந்த காரணத்திற்காகவும் படிப்பை இழக்கும் சூழலுக்கு ஆளாகி விடக்கூடாது. பெருகி வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதற்காக மாணவர்கள் ஆலோசனை மையம் (Students Help Line) 9698151515 ஆரமித்து. தமிழகம் முழுவதும் மாநில அளவிலான பிரச்சாரப்பயணத்தினை கடந்த 15.07.2010 முதல் 8.09.2010 வரை ’55′ நாட்களாக மேற்கொண்டு, தெரு நாடகம், நோட்டீஸ், போஸ்டர் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.. இதுநாள் வரை 21000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மாணவர்களாகிய நாங்கள் சந்தித்து இருக்கிறோம். அதில் மாணவர்களின் கல்வியையும், அவர்களின் மனதையும் பாதிக்க கூடிய விசயங்களை அவர்கள் Students Help Line தொடர்பு கொண்டு சொல்லும் போது இதுநாள் வரை அவர்களின் மனவேதனைக்கு ஆறுதல் சொல்ல ஆட்கள் இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை..
கல்விக்கான திட்டங்கள் கிடைக்காமல் அவதிப்படும் மாணவர்கள்:
கல்விக்கடன் கொடுப்பது “லோன் மேளா”க்களாக அரசியலாளர்களால் ஆக்கப்பட்டாலும்,ஏழை மாணவர்களுக்கு கல்வி கடனுதவி, மாணவர்களுக்கு 35 ஆயிரத்து 946 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வங்கிக்கடனுக்கான அடைப்படை தகவல்கள் மற்றும் விதிகள் ஏழை மக்களுக்கு தெரியாததால் இங்கே பேங்குக்கும் வீட்டுக்கும் நடக்கின்ற பெற்றவர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். கல்விக்கடனுக்கான வட்டி ரத்து என்கிற அறிவிப்புகள் வந்து 8 மாதங்களில் அந்த ஆணைகள் வங்கிகளுக்கு வரவில்லை என்றும், வட்டிக்கட்டினால் தான் அடுத்த வருட லோன் கொடுப்போம் என அலைக்கழிக்கபடுகிறார்கள். வங்கிக்கடன் கொடுக்கும் அதிகாரத்தினை கிளை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதால் அவர்கள் ஈவிரக்கமில்லாமல் நடக்கிறார்கள், .வட்டிகட்ட சொல்லுவதோடு மட்டுமல்லாமல் இப்போது புதுசா இன்சூரன்ஸ் எடுத்தால் தான் என தட்டிக்கழிக்க படுகிறார்கள்.மேலும் ஏழை மாணவர்களுக்கு மட்டும் ரிசர்வு பேங்க் ஆப் இண்டியா கொடுத்துள்ள எந்த வரையரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பதுதான் உண்மை. மேலும் வங்கிக்கடன் மட்டுமில்லாமல் முதல்தலைமுறை பட்டதாரிகளின் இலவச உயர்கல்வி திட்டத்தின் குலறுபடிகளாலும் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். பி.இ. படிப்புகளில் சேருவதற்கு ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 5,000 பேர்தான் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளில் 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது இதைத் தொடர்ந்தே 2010-11-ம் ஆண்டில் முதல் தலைமுறையைச் சேர்ந்த 78,086 மாணவர்கள் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று அரசு பெருமையுடன் கூறியது ஆனால் ராணி மேரிகல்லூரி விழாவில் துணை முதல்வர் இத்திட்டதின்கீழ் சுமார் 48000 மாணவர்கள் மட்டும் தான் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள் என்பது கவனிக்க பட வேண்டிய விசயம்..
மாணவர்கள் சந்திக்கும் உளவியல் மற்றும் பிற பிரச்சனைகள்:
வெளிச்சம் மாணவர்கள் ஆய்வில் கண்டறிந்தபடி பெறும்பான்மையான மாணவர்கள் 54% காதல் தோல்வி,3%சக மாணவர்களால் புறக்கணிக்கப் படுவது, 15%ஆங்கிலம் தெரியாமல் தாழ்வு மனப்பான்மை,26%மனதுக்குள் இனம் தெரியாத வேதனை,மற்றும் 2% ரேகிங் உட்பட்ட பிரச்சனைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. குறிப்பாக நான் பேசுவதை கவனிக்க கூட ஆள் இல்லை,என்னை புரிந்து கொள்ள ஆள் இல்லையே என ஏங்கித்தவிக்கும் மாணவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்.தோளுக்கு உயர்ந்த பிள்ளைக்கிட்ட நாம் என்ன பேசுவதுன்னு பெற்றவர்கள் நினைப்பதாலும் இங்கே தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நமது மானவர்கள் ஆலோசனை எண்ணில் வந்த அழைப்புகளில் நான் காதலால் கல்வி இழக்க போகிறேன் என்று புலம்பிய மாணவர்கள் அதிகம்.மேலும் வெளிச்சம் மாணவர்கள் பிரச்சாரப்பயண 55 நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என எண்ணும் போது வேதனையாக இருக்கிறது..கடைசியாக தற்கொலை செய்து கொண்டவர் வரிசையில். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்,முள்ளுக்குறிச்சி சென்னை அண்ணா பல்கலைகழக முதலாமாண்டு மாணவி ஜோதி …கல்லூரிகளுக்கு செல்லப்படும் மாணவர்கள் விகிதம் குறைவாக இருந்தாலும் கல்லூரிக்கு போகிற மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத பல காரணங்கள் மாணவர்களின் படிப்பையும்,உயிரையும் பறிபோகிறது என்பது தான் உண்மை.

- கல்விக்கடன் வட்டி விகிதம் ரத்து ஆணை மக்களுக்கும்-வங்கிகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும்!
- கல்விக்கடனுக்கான தனி பிரிவுகள் வங்கிகளில் துவங்க வேண்டும்.!
- வங்கிக்கடன் குறித்த அனைத்து விதிகள் மற்றும்.நடை முறைகளை பனிரெண்டாம் வகுப்பிலேயே தெரியப்படுத்த வேண்டும் அல்லது வங்கி கடன் பெறுவதற்க்கான நடை முறையை பாடதிட்டமாக்க பட வேண்டும்..!
- செக்ஸ் கல்வியை பள்ளி கல்லூரிகளில் முறையாக அமல்படுத்த வேண்டும்..!
- கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கால அவகாசமே கொடுக்காமல் கல்லூரியை விட்டு வெளியேற்றும்,கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
- கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்த போதும் அவர்களுக்கு அவர்களின் சான்றிதல்களை கொடுக்காத கல்லூரிகள் மீதும். கட்டவேண்டிய பணத்திற்க்கு பிணை கூலிகளாக்கப்படும் அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
- மாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதற்கு,மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முறையான ஆற்றுபடுத்துபவர்களை (Counselor) நியமிக்க வேண்டும்!
வெளிச்சம். சி.ஆனந்தகுமார்
Wednesday, August 18, 2010
வெளிச்சம் மாணவர்கள் குழு
ஏழை, எளிய மாணவர்கள் பட்டப்படிப்பு முடிக்காத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உதவி காரம் நீட்டும் வகையில் “வெளிச்சம் மாணவர்கள்’ குழு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். “வெளிச்சம் மாணவர்கள்’ குழுவினர் வாகனம் மூலம் ஒவ்வொரு கிராம பகுதியாக சென்று ஏழை, எளிய மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க தேவையான கல்வி கட்டண உதவியை பெற்று கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, கற்க வழி இல்லாத ஏழை மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து துவங்கிய, “வெளிச்சம் மாணவர்கள்’ குழுவினர் கடந்த 14 நாட்களில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று, “வெளிச்சம் மாணவர்கள்’ கல்வி உதவி தொகை ஏழை மாணவர்களுக்கு பெற்று தரும் பிரச்சாரத்தை துவக்கினர். பெரியார் பல்கலை பதிவாளர் சேதுகுணசேகரன் கொடி அசைத்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். “வெளிச்சம் மாணவர்கள்’ குழு மாநில ஓங்கிணைப்பாளர் ஆனந்த்குமார் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
வெளிச்சம் மாணவர்கள் குழு மூலம் முதல்கட்டமாக 486 மாணவ, மாணவியருக்கு கல்வி தொகை பெற்று கொடுத்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏழை, எளிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு செல்வந்தர்கள், தன்னார்வ அமைப்பு, சங்கங்கள் மூலமாக கல்வி கடனை பெற்று கொடுப்பதை வெளிச்சம் மாணவர்கள் குழு நோக்கமாக செயல்பட்டு வருகிறது.வெளிச்சம் மாணவர்கள் குழுவின் மூலம் பயன் அடைந்த 486 பேரில் 86 பேர் இன்ஜினியரிங் பட்டபடிப்பு படித்து வருகின்றனர். 11 பேர் டாக்டருக்கும், 36 பேர் ஆசிரியர் கல்வியியல் படிப்பும், 22 பேர் வக்கீலுக்கும் மற்றவர்கள் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் சேர்ந்து கல்லூரியில் படித்து வருகின்றனர்.
ஓமனில் இளநிலை விஞ்ஞானியாக பணியாற்றி வரும் செந்தில் என்பவர் “வெளிச்சம் மாணவர்கள்’ குழு மூலம் கல்வி உதவி பெற்ற உயர் நிலையில் உள்ளார்.இதேபோல, அடுத்த தலைமுறையில் உள்ள கல்வி கற்க வசதி இல்லாத மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு கல்வி கடன், கல்வி கட்டணம் செலுத்த முடியாதவர்களை கண்டறிந்து வெளிச்சம் மாணவர்கள் குழுவினர் உதவிடும் வகையில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளனர். ஏழை மாணவர்கள் கல்வி கற்க ஆர்வம் இருந்தும், பண வசதியில்லை என்றால் மொபைல் நம்பர் : 96981 51515 தொடர்பு கொண்டு பிரச்னை தீர வழி தேடலாம்.
நன்றி-தினமலர்
மேலும் தகவல் இங்கே கிளிக் பன்னவும்

Wednesday, July 14, 2010
இளங்கோவடிகள்
இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதினார். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர்..
சிந்து நதிப்பிரதேச நாகரீகம் பற்றி பல வரலாற்று ஆசிரியர்கள், இதுவே பாரத நாகரீகத்தின் தொட்டில் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வரலாறு மட்டுமல்லாது இன்னொரு சகோதர வரலாறும் உண்டு. இந்தச் சகோதரம் மூத்ததா, இளையதா என்று வழக்காடுவது நமது நோக்கமல்ல; உறவு உண்டு. அதுவே காவேரி நாகரீகத்தின் சிலப்பதிகார நாகரீகம்.
தமிழ் மொழியின் தலைக் காப்பியமாக, பல புதுமைகளை மேற்கொண்டு (இந்த புதுமைகளை விவரித்தால் பெருகும்) இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம், ஒரு கதையைப் பின்னணியாகக் கொண்ட காவியமா அல்லது ஒரு இனத்தின் வரலாற்றை பேசும் சரித்திர நூல் என்ற பிரமிப்பு எற்படுவது இயற்கை.
மனித நாகரீகத்தின் வெளிப்பாடாக விளங்கும் புற அமைப்புகள் மட்டுமில்லாது, மனிதநேயப் பண்பாடுகளும் நிறைந்த முழுமையான நாகரீகத்தை, இளங்கோவடிகள் காவியத்தில் காட்டுகிறார். சோழ நாட்டில் குணவாயிற் கோட்டம் என்றும் ஆசிரமத்தில் யோக நிலையில் இருந்து அவர் இக் காவியத்தை பாடியிருக்க முடியாது.
Orkut Communities link

Wednesday, June 30, 2010
ரோஜா ரோஜாதான்!
அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வாளி தூக்கவைத்த போதிலும், குடும்ப விழாவை அரசு விழா என்று அறிவிக்கத் தயங்கிய புரட்சித்தலைவியின் நேர்மையுள்ளத்தை வியப்பதா, அன்றி, அரசு விழா என்ற அறிவிப்பின் கீழ் குடும்ப விழாவை நடத்திக் காட்டிய கலைஞரின் ராஜதந்திரத்தை வியப்பதா தெரியவில்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலென்ன, ரோஜா ரோஜாதான்!
Monday, June 21, 2010
அன்புள்ள அப்பா..
அன்புள்ள அப்பா..
இன்று உலகமே நினைவுகூறும் தந்தையர் தினம்...தந்தையை மகிழ்விக்க பிள்ளைகளுக்குத் தரப்பட்ட உன்னத தினம்...தாங்கள் என்னையும்,தங்கையையும் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அன்போடு கவனித்துவருகிறீர்களே அது போன்ற ஒரு தந்தைக்காக அவரது மகள் எடுத்த முயற்சியால் உதித்த தினம்...
அப்பா..!
நம்பிக்கையின் உயிர் வடிவம் நீங்கள்..உலகின் வேறு எந்த சக்தியைக்காட்டிலும் மிகவும் வலியது தங்களுடனான என் இருப்பு....என் உலகம் நீங்கள் ..நான் பார்த்துணர்ந்த முதல் புத்தகம் தாங்கள்...என் பிஞ்சு விரல்களை உம் அஞ்சு விரல்கள் பற்றும் பொழுது பரவும் நம்பிக்கையை இன்று வரை வேறு எந்த விரல்களும் ஏற்படுத்தியதில்லை...மூச்சடக்கி தரையின் ஆழம் வரை சென்று நீர் எடுக்கும் வேரின் வலியை விழுதுகளோ,பறவைகளோ உணர்வதில்லை இருப்பினும் வேர்கள் தன் வேலையைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது..நீங்கள் என் வேர்..வசந்த காலங்களை மட்டுமே எமக்கு கொடுத்து இலையுதிர் காலத்தை இல்லாது செய்த வேர்.
அப்பா!
அங்குலம் அங்குலமாய் உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்...உங்களால் எழுதப்பட்ட கவிதை நான்...ஆண்டுகள் 30 ஐக் கடந்த பின்பும் இக்கவிதையின் மீதான திருத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது இருப்பினும் இன்னும் முழுமை பெறவில்லை என்பதில் தங்களுக்கு வருத்தம்தான்...அது அக் கவிதையை எழுதிய தங்களின் தவறல்ல எழுதப்பட்ட கவிதையின் தவறு.....
அங்குலம் அங்குலமாய் என்னை செதுக்கிய சிற்பியே!
தங்கள் வாழ்வின் அத்தனை நொடிகளும் என்னைப்பற்றிய நினைவுகளையே சுமந்து வருகிறது என்பதை நான் அறிவேன்...தங்கள் பார்வையின் வீச்சும் என்னை நோக்கிய இலக்காகவே இருந்து வருகிறது என்பதையும் அறிவேன்..
நீங்கள் எனக்களித்துவரும் சுதந்திரம் இன்னும் என்னை பிரமிக்க வைக்கிறது..என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை வியக்கச் செய்கிறது..
இந்த நன்னாளில் தங்களின் ஆசிகளோடு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
நன்றி சண் சிவா

Sunday, June 20, 2010
கனிமொழி இல்லையென்றால் } செம்மொழி இல்லை
உலக பொருளாதார சரிவிற்கு பின், நிலத்தின் மீது முதலீட்டு செய்தவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது , முதலிட்டளர்களை கவர மனை விற்ப்பனையாளர்கள் பல பரிசு திட்டங்களை அறிவித்தது, அதை போலத்தான் இந்த செம்மொழி மாநாட்டை மனை விற்பனையாளர் அதிபதி கருணாநிதி அறிவித்தார்.
கருணாநிதி சம்பந்தப்பட்டவர்களின் ஆயரத்திட்க்கு மேற்ப்பட்ட நிலங்கள் விற்பனை ஆகாமல் கோவை சுற்றுவட்டாரத்தில் இருக்கிரதானால் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்துகிறார்.
உலகமுழுவதும் உள்ள தமிழர்களிடம் இந்த நிலங்களை விற்பனை செய்ய இந்த மாநாட்டை பயன்படுத்த போகிறார் , இது உலக தமிழ் செம்மொழி மாநாடா ? இல்லை உலக வார்த்தார்கள் பங்கு பெரும் வணிபகூட்டமா?
ஒரு குடும்பத்தின் வருவாயை பெருக்க தமிழை பயன்படுத்தும் கருணாநிதி ஒரு தமிழ் துரோகியல்லவா ?????? மேலும் செய்திகள் கிளிக் பன்னவும்....
.

Saturday, June 19, 2010
இருக்கும் போதும் கவிதை இறந்த பின்பும் கவிதை..!!!
நன்றி ;பணிதுளி சங்கர்
Tuesday, June 15, 2010
View my complete profile நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பாக கழக வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, அவர்களது இல்லத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக செயலாளர் ராஜா P.செந்தூர்பாண்டியன் நேரில் சந்தித்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், "கழக வளர்ச்சி நிதியாக" 40,78,800/_ (நாற்பது லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து எண்ணூறு) ரூபாயை வழங்கினார்.
நன்றி முத்துகுமார் ராதாபுரம்
.
நன்றி முத்துகுமார் ராதாபுரம்
.
Thursday, June 3, 2010
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள் நிச்சயம் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=1PY-yKwbH0cplz open link
Wednesday, May 19, 2010
டேடி மம்மி வீட்டில் இல்லை ........தட பொட யாரும் இல்லை
Friday, May 14, 2010
Tuesday, May 11, 2010
இலவச SMS சேவை + வருமானம்
Wednesday, May 5, 2010
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன் .

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார் -எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய் ?
நான் கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கைய ஓட்ட முடியும் ?
அவர் சிரித்தபடி சொன்னார் - என்னை பார்
1 ரூபாய்க்கு அரிசி வாங்கி
உண்டு விட்டு உறங்கிவிடுவேன் .
நேரம் போகவில்லை என்றால் tv பார்பேன் .
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் போவேன்
உயர் சிகிச்சை பெற்றுடிவேன் ராஜ மரியாதையுடன் .
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும் ?
முதலாமவர் சிரித்தபடி யார் தெரியுமா ..??
தமிழ்நாட்டு குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் .
சமைப்பதற்கு gas அடுப்பு இலவசம்
பொழுதுபோக்கிற்கு இலவச Tv இலவச மின்சாரத்துடன்
குடும்பத்தோடு உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்...
எதற்காக உழைக்க வேண்டும் ..?
நான் கேட்டான்- உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன -?
பலமாக சிரித்தபடி சொன்னான்
மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவசம்
குழந்தைக்கு சத்துணவு இலவசம் , படிப்பு சீருடையுடன் மதிய உணவுடன் முட்டையும் இலவசம் , பாட புத்தகமுடன் பள்ளி செல்ல இலவச பஸ் பாசும் இலவசம்.
பெண் பருவமடைந்தால் திருமண உதவி தொகை 25000 இலவசம்,
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் ,
தேவையென்றால் மாப்பிளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் இதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்..
நான் எதற்காக உழைக்க வேண்டும்...??
வியந்து போனேன் நான் !!!
என் உயிர் தமிழகமே அவ்வளுவு காலம் தொடரும் இந்த நிலை ...??
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ..
ஒன்று கையுட்டு மற்றொன்று பிச்சை ..
இதில் நீ எந்த வகை ? எதை எடுத்து கொள்வது ..??
உழைக்காமல் உண்டு சோம்பேறியாய் போகிறாய் - இலவசம் நின்றால் உன் நிலைமை !!
உழைப்பவர் சேமிப்பை களவாட நீ துணிவாய்
இந்த நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்
அமைதிபூங்கவாம் தமிழகம் கள்வர் பூமியாயை மாறும் ..
இன்னும் வெகு தொலைவில் இல்லை தமிழா விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு !!
நாளைய தமிழகம் நம் கையில் !! உடன் பிறப்பே சிந்திப்பாய் !!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!!

Subscribe to:
Posts (Atom)