Wednesday, June 30, 2010

ரோஜா ரோஜாதான்!

முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்..  எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை  தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது.
அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வாளி தூக்கவைத்த போதிலும், குடும்ப விழாவை அரசு விழா என்று அறிவிக்கத் தயங்கிய புரட்சித்தலைவியின் நேர்மையுள்ளத்தை வியப்பதா, அன்றி, அரசு விழா என்ற அறிவிப்பின் கீழ் குடும்ப விழாவை நடத்திக் காட்டிய  கலைஞரின் ராஜதந்திரத்தை வியப்பதா தெரியவில்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலென்ன, ரோஜா ரோஜாதான்!

Monday, June 21, 2010

அன்புள்ள அப்பா..

அன்புள்ள அப்பா..
இன்று உலகமே நினைவுகூறும் தந்தையர் தினம்...தந்தையை மகிழ்விக்க பிள்ளைகளுக்குத் தரப்பட்ட உன்னத தினம்...தாங்கள் என்னையும்,தங்கையையும் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அன்போடு கவனித்துவருகிறீர்களே அது போன்ற ஒரு தந்தைக்காக அவரது மகள் எடுத்த முயற்சியால் உதித்த தினம்...
அப்பா..!


நம்பிக்கையின் உயிர் வடிவம் நீங்கள்..உலகின் வேறு எந்த சக்தியைக்காட்டிலும் மிகவும் வலியது தங்களுடனான என் இருப்பு....என் உலகம் நீங்கள் ..நான் பார்த்துணர்ந்த முதல் புத்தகம் தாங்கள்...என் பிஞ்சு விரல்களை உம் அஞ்சு விரல்கள் பற்றும் பொழுது பரவும் நம்பிக்கையை இன்று வரை வேறு எந்த விரல்களும் ஏற்படுத்தியதில்லை...மூச்சடக்கி தரையின் ஆழம் வரை சென்று நீர் எடுக்கும் வேரின் வலியை விழுதுகளோ,பறவைகளோ உணர்வதில்லை இருப்பினும் வேர்கள் தன் வேலையைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது..நீங்கள் என் வேர்..வசந்த காலங்களை மட்டுமே எமக்கு கொடுத்து இலையுதிர் காலத்தை இல்லாது செய்த வேர்.


அப்பா!
அங்குலம் அங்குலமாய் உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்...உங்களால் எழுதப்பட்ட கவிதை நான்...ஆண்டுகள் 30 ஐக் கடந்த பின்பும் இக்கவிதையின் மீதான திருத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது இருப்பினும் இன்னும் முழுமை பெறவில்லை என்பதில் தங்களுக்கு வருத்தம்தான்...அது அக் கவிதையை எழுதிய தங்களின் தவறல்ல எழுதப்பட்ட கவிதையின் தவறு.....
அங்குலம் அங்குலமாய் என்னை செதுக்கிய சிற்பியே!
தங்கள் வாழ்வின் அத்தனை நொடிகளும் என்னைப்பற்றிய நினைவுகளையே சுமந்து வருகிறது என்பதை நான் அறிவேன்...தங்கள் பார்வையின் வீச்சும் என்னை நோக்கிய இலக்காகவே இருந்து வருகிறது என்பதையும் அறிவேன்..
நீங்கள் எனக்களித்துவரும் சுதந்திரம் இன்னும் என்னை பிரமிக்க வைக்கிறது..என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை வியக்கச் செய்கிறது..
இந்த நன்னாளில் தங்களின் ஆசிகளோடு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...


 நன்றி சண் சிவா

Sunday, June 20, 2010

கனிமொழி இல்லையென்றால் } செம்மொழி இல்லை

உலக பொருளாதார சரிவிற்கு பின், நிலத்தின் மீது முதலீட்டு செய்தவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது , முதலிட்டளர்களை கவர மனை விற்ப்பனையாளர்கள் பல பரிசு திட்டங்களை அறிவித்தது, அதை போலத்தான் இந்த செம்மொழி மாநாட்டை மனை விற்பனையாளர் அதிபதி கருணாநிதி அறிவித்தார்.

கருணாநிதி சம்பந்தப்பட்டவர்களின் ஆயரத்திட்க்கு மேற்ப்பட்ட நிலங்கள் விற்பனை ஆகாமல் கோவை சுற்றுவட்டாரத்தில் இருக்கிரதானால் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்துகிறார்.


உலகமுழுவதும் உள்ள தமிழர்களிடம் இந்த நிலங்களை விற்பனை செய்ய இந்த மாநாட்டை பயன்படுத்த போகிறார் , இது உலக தமிழ் செம்மொழி மாநாடா ? இல்லை உலக வார்த்தார்கள் பங்கு பெரும் வணிபகூட்டமா?

ஒரு குடும்பத்தின் வருவாயை பெருக்க தமிழை பயன்படுத்தும் கருணாநிதி ஒரு தமிழ் துரோகியல்லவா ??????  மேலும் செய்திகள் கிளிக் பன்னவும்....


.

Saturday, June 19, 2010

இருக்கும் போதும் கவிதை இறந்த பின்பும் கவிதை..!!!

நன்றி ;பணிதுளி சங்கர் 

Tuesday, June 15, 2010

View my complete profile நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பாக கழக வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, அவர்களது இல்லத்தில், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக செயலாளர் ராஜா P.செந்தூர்பாண்டியன் நேரில் சந்தித்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், "கழக வளர்ச்சி நிதியாக" 40,78,800/_ (நாற்பது லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து எண்ணூறு) ரூபாயை வழங்கினார்.
நன்றி  முத்துகுமார் ராதாபுரம்


.